உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம்

'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம்

ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, ஆதித்யா தர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் நேற்று நடைபெற்றன. ஆனால், ஹிந்தி பிரிமியர் காட்சிகள் மட்டும்தான் நேற்று மாலையும், இரவும் நடந்தது. இதர மொழிகளில் நடைபெறவில்லை. ஹிந்தியிலும் பல தியேட்டர்களில் 'பைல்' டவுன்லோடு தாமதம் ஆனதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இன்று காலை காட்சியிலாவது இதர மொழிகளில் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த மொழிகளுக்கான தணிக்கை சான்றிதழ் இன்றுதான் வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தி தவிர பிற மொழிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்தப் பிரதிகளை தணிக்கைக்கு அனுப்ப தாமதமாகியுள்ளது.

இன்று மாலை காட்சியாவது மற்ற மொழிகளில் காட்சிகள் திரையிடப்படுமா அல்லது நாளை முதல் திரையிடப்படுமா என்பது குறித்த தெளிவான அறிவிப்புகள் இதுவரை வரவில்லை. தயாரிப்பு நிறுவனம் காட்சிகள் ரத்தானது குறித்தோ, அடுத்து எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்தோ எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !