உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம்.

காசர்கோடு எம்பஸி
மலையாள இயக்குநர் ஆதிஷ் எம் நாயர் இயக்கத்தில் வெளிவரவுள்ள தொடர் ' காசர்கோடு எம்பஸி',. இந்த தொடரில் கபீர் துஹான் சிங், அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், தீபக் பரம்போல், மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காசர்கோடு பகுதியில் நடக்கும் போலி பாஸ்போர்ட்குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நாளை(மார்ச் 20ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

பார்டர்-2
பாலிவுட் இயக்குநர் அனுராக் சிங் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'பார்டர்-2'. இந்த படத்தில் சன்னி தியோல், வருண் தவான் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.1997-ல் வெளியான சூப்பர்ஹிட் 'பார்டர்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படம் நாளை(மார்ச்.20ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சிரையா
ஷஷாந்த் ஷா இயக்கத்தில் வெளியாகவுள்ள தொடர் 'சிரையா'. திவ்யா தத்தா மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ள இந்த தொடரில் பாரம்பரியக் குடும்பங்களுக்குள் நடக்கும் திருமண வன்புணர்வு, சம்மதம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நாளை(மார்ச் 20ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ஏஜென்ட் ஸீட்டா
டானி டி லா டோரெ இயக்கத்தில், மரியோ கசாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள ஆங்கில திரைப்படம் 'ஏஜென்ட் ஸீட்டா'. இந்த திரைப்படம் நாளை(மார்ச் 20ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

லேண்ட் லார்ட்
கன்னட இயக்குநர் ஜடேஷ் கே. ஹம்பி இயக்கத்தில் துனியா விஜய் ரச்சிதா ராம், ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லேண்ட் லார்ட்'. இந்த படம் இன்று(மார்ச் 19ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !