உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!


யோகி பாபு நடித்துள்ள 300வது படம் அர்ஜுனன் பேர் பத்து. ராஜ்மோகன் இயக்கி உள்ள இந்த படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அந்த டீசரில், யோகி பாபு ஓட்டி வரும் ஒரு வண்டி திருடு போகிறது. அதையடுத்து அவர் போலீசில் புகார் அளிக்க அந்த வண்டியை தேடி வரும்போது, இவரை போலவே பலரும் அதே வண்டி திருடு போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கிறார்கள். இதன் மூலம் இந்த வண்டியை யாரோ ஒருவர் மோசடி செய்து பல பேரிடத்தில் விற்பனை செய்திருப்பது தெரியவருகிறது. அந்த நபர் யார் என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது காவல்துறை.

அதேபோல் யோகி பாபு எனது வண்டி எனக்கு கிடைத்தால்தான் நான் வீட்டுக்கே செல்வேன் என்று சொல்லி தனது வண்டியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதையடுத்து அந்த வண்டியை பல பேர் இடத்தில் விற்பனை செய்த மோசடி பேர்வழியை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் மீதி கதை. இந்த அர்ஜுனன் பேர் பத்து படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !