உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இது தான் பக்தியா... : நடிகர் அல்லு சிரிஷ் போலீசில் புகார்

இது தான் பக்தியா... : நடிகர் அல்லு சிரிஷ் போலீசில் புகார்

தெலுங்குத் திரை உலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். இவரது தம்பி அல்லு சிரிஷ், தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான 'கவுரவம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் பிலிம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு அனுமன் கோவிலில், தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை டிஜே செட்டப் மூலம் உரத்த சத்தத்துடன் பக்திப் பாடல்கள் சில நாட்களாக ஒலிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, பிலிம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இருப்பினும், அது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், தற்போது இதுகுறித்து ஹைதராபாத் மாநகரக் காவல்துறையைத் டேக் செய்து பதிவிட்டுள்ளார். இது மத பக்தி தொடர்பானது, இதில் தலையிடாதீர்கள் என்று இவரது கருத்தைக் கண்டித்துச் சிலர் சோஷியல் மீடியாவில் விமர்சனங்களை வெளியிட்டனர்.

ஆனால், அதற்குப் பதிலளித்த அல்லு சிரிஷ், நானும் ஆன்மிக பக்தி உள்ளவன் தான்; அனுமனை வழிபடுபவன் தான். ஆனால், அதிகாலை 2 மணிக்கு டிஜே செட்டப் மூலம் காதுகள் கிழியும் அளவிற்கு சத்தமாகப் பாட்டுப் பாடுவது பக்தியாகாது. நான் புகார் அளித்தது மத நம்பிக்கையைப் பற்றி அல்ல; பொது ஒழுக்கம் மற்றும் மக்களின் நிம்மதி குறித்து என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !