உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிக்மா' ரிலீஸ்.. சந்தோஷமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது: இயக்குனர் சஞ்சய்

'சிக்மா' ரிலீஸ்.. சந்தோஷமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது: இயக்குனர் சஞ்சய்


லைகா நிறுவனம் தயாரிப்பில் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம், முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நாளை (அக்.,2) ரிலீசாகிறது. படம் பற்றி ஜேசன் சஞ்சய் கூறியதாவது: சிக்மா படம் ரிலீசாக இருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. சினிமா எனும் பிரமாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குனராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. 'சிக்மா' திரைப்படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !