சென்னையில் தோழிகளுடன் பொழுதுபோக்கும் சமந்தா
ADDED : 1720 days ago
நடிகை சமந்தா தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட பின்னரும் தனது நடிப்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துவரும் சமந்தா தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து செல்கிறார்.
அப்படி சென்னை வரும்போது படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள தனது தோழிகளுடன் ஜாலியாக ஷாப்பிங், டின்னர் என பொழுதை கழித்து வருகிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு நட்பின் மகத்துவத்தை பறைசாற்றி வருகிறார். சமந்தா சென்னை பல்லாவரம் பகுதியில் பிறந்து படித்து வளர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..