லிப்லாக் கொடுத்து காதலர் தினம் கொண்டாடிய சுஜா வருணி
ADDED : 1736 days ago
சினிமாவில் பிளஸ்-2 என்ற படத்தில் அறிமுகமான சுஜா வாருணி, அதன்பிறகு கேரக்டர் ரோல்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். 2018ல் சிவாஜி பேரன் சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுஜா. இவர்களுக்கு அத்வைத் என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில், தனது காதல் கணவரான சிவகுமாருக்கு காதலர் தின பரிசாக ஒரு லிப்லாக் முத்தம் கொடுத்து, அந்த போட்டோவுடன் என்றென்றும் என் காதலராக என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சுஜா.