மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1687 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1687 days ago
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1687 days ago
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட படம் 'ட்வென்டி-20'. மலையாள சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் இணைத்து இந்தப்படத்தை வெற்றிகரமாக இயக்கியவர் ஆக்ஷன் படங்களில் பிதாமகன் என அழைக்கப்படும் இயக்குனர் ஜோஷி. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஜோஷி, மோகன்லால் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் என முன்னணி ஹீரோக்களை வைத்தே படங்களை இயக்கியவர்.
எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் இறங்குமுகத்தை போல, ஜோஷி கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் ஜோஷியை மீண்டும் கைதூக்கி விடும் விதமாக அவரது படத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்கு பாப்பன் என டைட்டில் வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1687 days ago
1687 days ago
1687 days ago