சரோஜா தேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது
சென்னை : பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேசன், தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று இசையமைப்பாளர்கள் டி.இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும், இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, டிவி நடிகர்கள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை பெற இவர்கள் நாளை (பிப்.,20) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.