விஜய் 65ல் வில்லனாக நவாசுதீன் சித்திக்
ADDED : 1698 days ago
விஜய்யின் 65 படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். கடந்த டிசம்பர் மாதமே இதற்கான அறிவிப்பு வெளியானது. அனிருத் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். அதேசமயம் கதாநாயகி யார் என்கிற விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா நடிக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கடந்த 2009ல் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.