கிரிஷ்ஷின் முடிவை மாற்றிய உப்பென்னா வெற்றி
ADDED : 1686 days ago
தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வேதம் படத்தை இயக்கியவர் இயக்குனர் கிரிஷ் பவன். இவர் அடுத்ததாக பவன் கல்யாணின் படத்தை இயக்கவுள்ளார். தற்போது பவன் கல்யாண், அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால், அந்த இடைப்பட்ட காலத்தில் அறிமுக நடிகர் வைஷ்ணவ் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யலாமா அல்லது தியேட்டர்களில் திரையிடலாமா என குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளார் கிரிஷ். இந்தநிலையில் தான் வைஷனவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பென்னா படம் தியேட்டர்களில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால், தனது படத்தை தியேட்டர்களிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் கிரிஷ்.