ஷாருக்கான் படத்தில் கதாநாயகியான ஆலியா பட்
ADDED : 1687 days ago
பாலிவுட் சினிமாவின் நடசத்திர வாரிசாகிய ஆலியா பட், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதனை தொடர்ந்து இந்தியில் அவர் ஷாருக்கான் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக அல்ல, ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் கதாநாயகியாக நடிக்கிறார் ஆலியா பட்.
படத்திற்கு டார்லிங்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாய்க்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தாயாக 'டெல்லி க்ரைம்' புகழ் ஷெபாலி ஷா நடிக்கிறார். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜாஸ்மீத் கே.ரீன் என்பவர் இந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்..