விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்'
ADDED : 1703 days ago
பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு அடுத்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் போலீஸாக நடிக்கிறார். அஞ்சலி நாயர் நாயகி. தமிழ் என்பவர் இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதையின் படப்பிடிப்புக்கு உடல், மன ரீதியாக தயாராக கடினமாக இருந்தது. இருப்பினும் எங்களது படக்குழு சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்'' என விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.