உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புற்று நோய் பாதித்த ரசிகரை நேரில் சந்தித்து உதவிய பவன் கல்யாண்

புற்று நோய் பாதித்த ரசிகரை நேரில் சந்தித்து உதவிய பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி அதை நடத்தியும் வருகிறார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்து அனைவரிடன் பாராட்டையும் பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலை புற்று நோயால் உயிருக்கு போராடி வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு 5லட்ச ரூபாயும், வெள்ளி விநாயகர் சிலையையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !