கமல் அழைத்தாலும் அவரது கட்சிக்கு செல்ல மாட்டேன் : ஆதி பேட்டி
ஓசூர்: கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில், என, மிருகம் படத்தின் நடிகர் ஆதி கூறினார்.
இது குறித்து, ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு என் ஆதரவு உண்டு. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். யார் வருவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என் ரசிகர்கள், யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். எல்லோரும் முன்பு போல் இல்லை; மிகவும் தெளிவாக உள்ளனர்.
யார் நல்லது செய்கிறார்கள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியும். கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில். சினிமா துறையில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். தற்போது தமிழில், கிளாப், பாட்னர், தெலுங்கில், குட்லக் சகி ஆகிய படங்கள் நடித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.