உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆலியாபட் 28ஆவது பிறந்தநாளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர் பர்ஸ்ட் லுக்

ஆலியாபட் 28ஆவது பிறந்தநாளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர் பர்ஸ்ட் லுக்

ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சுதந்திர போரட்ட வீரர் அல்லூரியாக ராம் சரண் நடிக்க, அவரது மனைவி சீதாவாக ஆலியா பட் நடிக்கிறார். டிசம்பர் 10-ந்தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஆலியா பட் விரைவில் தனக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார்.



இந்நிலையில், மார்ச் 15-ந்தேதியான நாளை ஆலியாபட்டின் 28வது பிறந்த நாள் என்பதால், காலை 11 மணிக்கு ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் நடித்து வரும் சீதா கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இதை படக்குழு அதிகாரப் பூர்வமாக டுவிட்டரில் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !