மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1635 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1635 days ago
சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது நடிகை பார்வதி விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. மம்முட்டி 'கசபா' என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடித்திருந்தார் என சில வருடங்களுக்கு முன் குற்றம் சாட்டிய பார்வதி, மம்முட்டி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். அதனால் அவரது இரண்டு படங்களை புறக்கணித்து ஓடவிடாமல் செய்தனர் ரசிகர்கள். அதேபோல மம்முட்டியை எதிர்த்ததால் பட வாய்ப்புகளும் பார்வதிக்கு குறைந்து போனது.
இந்தநிலையில் தான், ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக புழு என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா இந்தப்படத்தை இயக்குகிறார்.. இந்தப்படம் பற்றி சமீபத்தில் பார்வதி கூறும்போது, “இதில் மம்முட்டி நடிக்க இருக்கும் கதாபாத்திரம் இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒன்று. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஷாக் கொடுக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் இருக்கும்” என்று கூறி மம்முட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளார் பார்வதி..
1635 days ago
1635 days ago