மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1660 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1660 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1660 days ago
கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க விபிஎப் நிறுவனங்கள் வருகிற மார்ச் 31ந் தேதி வரை சலுகை கட்டணத்தை அறிவித்தது. அது தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு தற்போது பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது.
விபிஎப் கட்டணம் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளது.
1660 days ago
1660 days ago
1660 days ago