கிருஷ்ணகிரியில் ஆனந்தம் விளையாடும் வீடு
ADDED : 1707 days ago
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி அடுத்து இயக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. கௌதம் கார்த்திக், சேரன், ஷிவத்மிகா ராஜசேகர், சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட 30 நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஸ்ரீ வாரி பிலிம்ஸ் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.