உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் தங்கத்தை விட்டுட்டு எப்படி போவேன் - நகுல்

என் தங்கத்தை விட்டுட்டு எப்படி போவேன் - நகுல்

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. தற்போது இதில் பங்கேற்கும் பிரபலங்கள் தேர்வு நடக்கிறது. சில தினங்களாக இதில் நடிகர் நகுல் பங்கேற்க போவதாக செய்தி வெளியாகிறது. இதுகுறித்து, ‛‛நிறைய பேர் நான் பிக்பாஸ் 5வில் பங்கேற்க போவதாக போன் போட்டு கேட்கின்றனர். அப்படி யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படியே வந்தாலும் என் தங்கத்தை விட்டு எப்படி செல்வேன்'' என மார்பில் தூங்கும் தனது செல்ல குழந்தையை காண்பித்து, இந்த வதந்திக்கு வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நகுல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !