மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1652 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1652 days ago
சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது இன்ஸ்ட்ராகிராமில் குறிப்பிட்டிருந்தார். இதை நேஹாவின் திருமண செய்தி என்று கருதி பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேஹா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும். என் அம்மாவை விட நானே தயாயான மாதிரி அதிகம் உணர்கிறேன். தங்கையை வளர்க்க ஆர்வமாக இருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.
19 வயதாகும் நேஹா அக்கா ஆகியிருப்பது குறித்து பலர் வாழ்த்தினாலும், அதை கிண்டல் செய்து வருகிறவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நேஹா கூறும்போது அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
1652 days ago
1652 days ago