உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 நாட்கள் இடைவெளியில் வெளியாகும் கர்ணன் நாயகி படங்கள்

5 நாட்கள் இடைவெளியில் வெளியாகும் கர்ணன் நாயகி படங்கள்

மாரி செல்வராஜ் டைரக்சனில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம், வரும் ஏப்-9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். ராஜபாளையத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக அவர் நடித்துள்ளார். அதேசமயம் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கோ-கோவை மையப்படுத்தி மலையாளத்தில் உருவாகியுள்ள 'கோ-கோ' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஜிஷா.

இந்தப்படத்தை ராகுல் ரிஜி நாயர் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் கர்ணன் ரிலீசை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து அதாவது ஏப்-14ல் ரிலீஸாக இருக்கிறது. ஆச்சர்யமாக இந்தப்படத்தில் கோகோ வீராங்கனையாக நடிக்காமல், கோகோ பயிற்சியாளராக நடித்துள்ளார் ரஜிஷா.

அந்தவகையில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ரஜிஷா விஜயனுக்கு, இந்த இரண்டு படங்களுமே வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !