உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தலைவி' - வெளியீட்டில் மாற்றமா ?

'தலைவி' - வெளியீட்டில் மாற்றமா ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் 'மழை மழை...' என்ற பாடலை ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப் போகிறார்களாம். அப்பாடலுக்கான போஸ்டரில் இருக்கும் கங்கனாவின் கிளாமரான புகைப்படத்தைப் பார்க்கும் போது அது நடிகை கதாபாத்திரத்திற்கானப் பாடல் எனத் தெரிகிறது.

அந்தப் பாடல் காட்சிகள் தமிழ் டிரைலரில் இடம் பெறவில்லை. ஆனால், ஹிந்தி டிரைலரில் இடம் பெற்றுள்ளது. 'சலி...சலி...' எனத் தொடங்குகிறது அந்தப் பாடல். இதனிடையே, தேர்தல் காலம் என்பதால் 'தலைவி' படத்தின் வெளியீடு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இருக்கும் என செய்தி பரவியது. ஆனால், திட்டமிட்டபடியே படத்தை ஏப்ரல் 23ம் தேதிதான் வெளியிடப் போகிறார்களாம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !