மேலும் செய்திகள்
சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த்
1616 days ago
ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம்
1616 days ago
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இன்று தங்களது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.
இருவருக்கும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னணி ஹீரோயின்கள் சிலரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது இன்றைய தலைமுறை நடிகைகளிடம் இருக்கும் நட்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
காலையில் தனது சிறு வயது தோழி நடிகை கல்யாணிக்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ், மாலையில் தான் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங், அற்புதமான வருடமாக அமைய வாழ்த்துகள். நாம் இருவரும் ஒன்றாக நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல டீசன்டான புகைப்படம் கூட கிடைக்கவில்லை,” என வருத்தத்துடன் சுமாரான போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
1616 days ago
1616 days ago