ஜதி ரத்னாலு பட இயக்குனருக்கு கார் பரிசளித்து கலாட்டா செய்த தயாரிப்பாளர்
ADDED : 1682 days ago
கொரோனா தாக்கத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் வெளியாகி வரும் படங்கள், மிகப்பெரிய வெற்றியை பெற்று, மற்ற திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி வருகின்றன அந்தவகையில் உப்பென்னா மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஜதி ரத்னாலு ஆகிய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு தேடி கொடுத்துள்ளன.
இந்தநிலையில் ஜதி ரத்னாலு படத்தின் இயக்குனர் கே.வி.அனூப்புக்கு லம்போகினி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள். ஆனால் இதில் என்ன காமெடி என்றால், அவர்கள் வழங்கியது குழந்தைகள் விளையாடும் பொம்மை கார் இந்த காரை இயக்குனர் அனுதீப் பரிசாகப் பெற்றுக் கொள்ளும் புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.