9 ஆண்டுகளுக்கு பின் விஷாலின் மத கஜ ராஜா-விற்கு விடிவுகாலம்
ADDED : 1642 days ago
2012ம் ஆண்டு, அதாவது 9 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கதில் விஷால் நடித்த படம் மதகஜராஜா. இதில் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், நிதின் சத்யா, சோனுசூட், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிவரவில்லை. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதற்கு பெரும் தொகை தர ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு ஓடிடி தளத்தில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.