மேலும் செய்திகள்
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1615 days ago
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1615 days ago
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மலையாள திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தற்போது முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து 'பாரோஸ்' என்கிற பேண்டஸி படத்தை இயக்குகிறார். கடந்த சில தினங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நடிகர் பிரித்விராஜும் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் துவக்க விழா பூஜையிலும் பிரித்விராஜ் கலந்துகொண்டார்.
இந்தநிலையில் பிரித்விராஜ் நடிக்கும் காட்சி ஒன்றை, படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் அவருக்கு விளக்கி சொல்வது போன்று தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று, பிரித்விராஜ் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
கடந்த 2019ல் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். பிரித்விராஜும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல தற்போது தான் இயக்குனராக உருவெடுத்துள்ள படத்தில் தானும் நடிப்பதுடன் பிரித்விராஜுவுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒதுக்கியுள்ளார் மோகன்லால்.
1615 days ago
1615 days ago