மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1615 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1615 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1615 days ago
மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனர் வரிசையில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி என முன்னனி நடிகர்களை மட்டும் வைத்தே, கிட்டத்தட்ட நூறு படங்களை இயக்கிய ஜோஷி, மலையாள சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து 'டிவென்ட்-20' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்தநிலையில் ஜோஷியின் மகன் அபிலாஷும் தந்தை வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் இவரது டைரக்சனில் நடிப்பதுடன், அந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவரை, கடந்த வருடம் தான் தயாரித்து, நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி இருந்தார் துல்கர்.. இயக்குனர்கள் ஜோஷி, சத்யன் அந்திகாடு போன்றவர்கள் எல்லாம் துல்கரின் தந்தையான மம்முட்டியின் ஆரம்ப கால வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1615 days ago
1615 days ago
1615 days ago