ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா
ADDED : 1638 days ago
தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரிக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் மதுரை மணிக்குறவன். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சுமன், ராதாரவி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜரிஷி இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களுக்கும் ஒரேநாளில் இசை கோர்ப்பை செய்துள்ள இவர், ‛மனசில பெரியவன் தான் மதுரக்காரன்...' என்ற பாடலையும் பாடியுள்ளார். இளையராஜா புதிதாக கட்டியுள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.