விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் மரக்கன்றுகளை ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைந்த செய்தி அறிந்து, காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தாலும் மக்கள் மனதில் எவ்வளவு பெரிய ஹீரோவாக அவர் திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் தலைவர்கள் இரங்கல், அஞ்சலி
திரையுலகினர் இரங்கல், அஞ்சலி
மயில்சாமி, ஆடுகளம் நரேன், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ஆர்.பாண்டியராஜன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நாசர், போண்டா மணி, ஜாக்குவார் தங்கம், யோகிபாபு, அந்தோணிசாசன், தாமு, கவுண்டமணி, வைரமுத்து, வையாபுரி, சரத்குமார், டாக்டர் சீனிவாசன், சார்லி, ஆர்த்தி, கணேஷ், பிரியா பவானி சங்கர், திரிஷா, லிங்குசாமி, கஞ்சா கருப்பு, சரண், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், சந்தானம், கார்த்திக் சுப்பராஜ், லொள்ளு சபா சாமிநாதன், அர்ஜுன், சரஸ்வதி, குஷ்பு, காமெடி நடிகர் புகழ், பாபி சிம்ஹா, தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, ஹிப் ஹாப் ஆதி, ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர், மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.செல்வமணி, சசிகுமார், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதி, இமான் அண்ணாச்சி, விஜய் ஆண்டனி, சந்தானம், அர்ஜுன் தாஸ், ஜெய், பி.வாசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மரக்கன்றுகள் ஏந்தி அஞ்சலி
இந்த பூமி உள்ள வரை விவேக்கின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். போய் வாருங்கள் விவேக்!