மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த விவேக்
மறைந்த நடிகர் விவேக், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தாலும் மக்கள் மனதில் எவ்வளவு பெரிய ஹீரோவாக அவர் திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அதிலும் கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் அளித்த கடைசி பேட்டி ஒன்றில் தனது மகளின் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதில், ‛‛சினிமாவையும், குடும்பத்தையும் எப்போதும் நான் ஒன்றாக இணைக்க மாட்டேன் என்றவர், மகள்கள் பற்றி கூறும்போது, ‛‛மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம். இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் சினிமாவில் நாட்டமில்லை. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என தெரிவித்துள்ளார்.
மகளின் திருமணத்தை பார்க்கலாம் என நினைந்திருப்பார் விவேக். ஆனால் காலன் அவரை அழைத்து கொண்டு சென்றுவிட்டது துரதிர்ஷ்டமே.