உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரேஷ்மாவின் புதிய தொடர் அபி டெய்லர்ஸ்

ரேஷ்மாவின் புதிய தொடர் அபி டெய்லர்ஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பூவே பூச்சூடவா மூலம் புகழ்பெற்றவர் ரேஷ்மா. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக நடித்த மதனைத்தான் அவர் திருமணம் செய்யவும் இருக்கிறார்.

பூவே பூச்சூடவா ஆயிரம் எபிசோட்களை கடந்த நிலையில் தற்பொழுது ரேஷ்மா ஹீரோயினாக நடிக்கும் புதிய சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்க இருக்கிறவர் மதன். இதில் ரேஷ்மா தையற்கலை நிபுணராக நடிக்கிறார். நிஜ காதலர்களே தொடரின் ஜோடியாக நடிப்பதால் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !