மூன்றாவது முறையாக இரண்டு வேடங்களில் கார்த்தி
ADDED : 1624 days ago
இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து கார்த்தி நடிப்பில் சர்தார் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. மேலும் படம் குறித்த குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் கார்த்தி உளவாளி, போலீஸ் என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதற்கு முன்பு சிறுத்தை, காஸ்மோரா படங்களில் இரண்டு வேடங்களில் நடித்தவர் மூன்றாவதாக இப்படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறார். மேலும ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.