தயாரிப்பாளர் பாபுராஜா திடீர் மரணம்
ADDED : 1703 days ago
சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி, விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன் உள்பட பல படங்களை தயாரித்தவர் பாபுராஜா. சூப்பர்குட் பிலிம்சில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். கடைசியாக திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தை தயாரித்தார்.
53 வயதான பாபுராஜா கடந்த சில வருடங்களாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பாபுராஜாவின் இயற்பெயர் பாபா பக்ருதீன். அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் ஜாவீத் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் என்ற மகன்களும் உள்ளனர்.