மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1612 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1612 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1612 days ago
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பாஜகவில் இணைந்தார். இருந்தாலும் கன்னியாகுமரி பார்லிமென்ட்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜய் வசந்திற்கு “வாழ்த்துக்கள் தம்பி” என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் வாழ்த்துக்கு, “மிக்க நன்றி சகோதரி” என விஜய் வசந்த் பதிலளித்துள்ளார்.
மேலும், திரையுலகத்தைச் சேர்ந்த கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சரத்குமார், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணுவிஷால், சிபி சத்யராஜ், மஞ்சு மனோஜ், சதீஷ், கிருஷ்ணா, மாஸ்டர் மகேந்திரன், மனோபாலா, சாந்தனு, மகத், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மோகன்ராஜா, அறிவழகன், மாரி செல்வராஜ், அகமது உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
1612 days ago
1612 days ago
1612 days ago