மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1612 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1612 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1612 days ago
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர் தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
65 வயதான பிரகாஷ் படுகோனே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பத்து நாட்களுக்கு முன்பாகவே பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோர் லேசான தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்துவிட்டாராம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார். அவரது மனைவியும், மகளும் வீட்டிலேயே குணமடைந்துவிட்டதாக அவர்களது குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.
1612 days ago
1612 days ago
1612 days ago