உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட காஜல் அகர்வால்

கணவருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட காஜல் அகர்வால்

கொரோனா தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதைக் கடந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் தனது கணவருடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “எப்போது முடிகிறதோ அப்போது அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு நடிகை சாக்ஷி அகர்வால் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 18 வயதிற்கு மேற்பட்ட சினிமா நடிகர்களும், நடிகைகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பல பொதுமக்களும் தடுப்பூசி போட முன் வருவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !