மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1581 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1581 days ago
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை சமீபத்தில் தான் அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதனால், தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் கங்கனா.
இந்நிலையில் தனக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார். “கடந்த சில நாட்களாக என் கண்களில் லேசான எரிச்சலும், சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்ந்தேன். ஹிமாச்சல் செல்வேன் என நினைத்தேன். அதனால் நேற்று பரிசோதனை மேற்கொண்டேன், இன்று(மே 8) எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வைரஸ் என்னுடைய உடலில் பார்ட்டி வைக்கும் எனத் தெரியாது. இப்போது அதை தகர்த்தெறிவேன் என்பது எனக்குத் தெரியும்.
உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை பயமுறுத்தும். கொரோனாவை அழிக்க வாருங்கள், அது சாதாரண சிறிய ப்ளு போன்றது. அது நம் மீது அதிகப்படியான அழுத்ததையும் மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1581 days ago
1581 days ago