மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1577 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1577 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1577 days ago
ஜீ தமிழ் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'செம்பருத்தி'. இத்தொடரில் செம்பருத்தியாக நடிக்கும் மலையாள நடிகை ஷபானாவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடிக்கும் ஆர்யன் என்பவருக்கும் காதல் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆர்யன் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகை, “நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா ?” எனக் கேட்டதற்கு 'இவங்களுக்கு என்ன சொல்லட்டும்' என ஷபானாவை டேக் செய்து பதிலளித்துள்ளார். அதற்கு ஷபானா 'என்னுடையது' என கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் ஒருவர், 'உங்களுக்கு மலையாளம் தெரியுமா' எனக் கேட்டதற்கு 'கத்துக்கிட்டு இருக்கேன்' என பதிலளித்துள்ளார்.
மற்றொருவர், “செம்பருத்திய பிடிக்கும்னு சொல்லிட்டு எதுக்கு ரோஜா கூட ரொமான்ஸ் பண்றீங்க பிரண்ட்” எனக் கேட்டதற்கு, 'அதை கொடுத்தவங்க செம்பருத்தி” என காதலுடன் பதிலளித்துள்ளார்.
இந்த சாட்டிங்கை வைத்து இருவரும் காதலர்கள் என ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். விரைவில் இருவரும் தங்களது காதலை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
1577 days ago
1577 days ago
1577 days ago