மேலும் செய்திகள்
அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர்
1578 days ago
காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ்
1578 days ago
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று(மார் 14) முஸ்லிம் மதப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலை யுவனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து பாடியுள்ளனர்.
அந்தப் பாடலை அறிமுகப்படுத்தி டுவிட்டரில், “இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சகோதரனாக இதில் பங்கெடுத்ததற்கு நன்றி, இது எனக்கு பல அர்த்தத்தை உணர்த்துகிறது,” எனக் குறிப்பிட்டார்.
அதற்கு நன்றி தெரிவித்த அமீன், “எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து சகோதரர் யுவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு பக்தி மயமான பாடலில் எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. இந்த ஈத், உங்கள் அனைவருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன், யுவன் இசையில் பாடியுள்ளார்.
1578 days ago
1578 days ago