நூற்றாண்டு நினைவு: சத்யஜித் ரேவின் கதைகள் சினிமா ஆனது
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்த சத்யஜித் ரே இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர். வங்கம், இந்தி, ஆங்கில மொழிகளில் இவர் இயக்கிய படங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட முறை தேசிய விருது பெற்றவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. கொரோன தொற்று காலம் என்பதால் அது தொடர்பான விழாக்கள் நடக்கவில்லை. இந்த ஆண்டு மேமாத்துடன் நூற்றாண்டு நிறைவடைந்தது. கொரோன தொற்றின் 2வது அலை காரணமாக இப்போதும் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
இதற்கிடையில் சத்யஜித்ரேவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சத்யஜித் ரேயின் 4 கதைகளை திரைப்படமாக்கி உள்ளது நெட்பிளிக்ஸ். அபிஷேக் சவுபே, ஸ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகிய முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.