சதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்
ADDED : 1588 days ago
செஸ் போட்டியில் ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டம் பெற்றவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். தற்போது 'செக்மேட் கோவிட் - செலிபிரிட்டி எடிசன்' என்ற நிகழ்ச்சிக்காக விஸ்வநாதன் ஆனந்த்துடன் இணைந்து திரையுலக பிரபலங்கள் சிலர் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டை விளையாட இருக்கின்றனர். இந்த விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்துடன் கிச்சா சுதீப் மோதுகிறார். இவர் தவிர பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் விஸ்வநாதன் ஆனந்த்துடன் மோத இருக்கிறார். சதுரங்கம் விளையாடும் இளைஞர்களை ஊக்குவிப்பதுடன், இந்த காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இதயம் கொண்ட நல்ல உள்ளங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த போட்டியை நடத்துகிறார்களாம்.