உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன்

டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன்

கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனாலும், சில டிவிக்களின் தொடர்கள் ரகசியமாக படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது பற்றி அந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.

“பிக் பாஸ் ஜோடிகள் செட்டிற்குத் திரும்பியுள்ளோம். அனைத்து பாதுகாப்பு அம்சங்ளையும் பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சென்ட்ராயன், கேப்ரியாலா, ஆஜித் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலிருந்து விலகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !