தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் : மீரா மிதுன்
ADDED : 1574 days ago
ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். பிறகு அழகி போட்டி நடத்தியதில் நடந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்குள் வந்து பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதோடு அடிக்கடி சினிமா முன்னணியினர் பற்றி தாறுமாறாக எதையாவது பேசி தன்னை விளம்பரத்துக்குள் வைத்துக் கொள்கிறவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாணமாக படுத்துக் கொண்டு காளி குறித்து பேசி பரபரப்பாக்கினார். இந்த நிலையில், தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொர்டர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் வெளிவருவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். தற்கொலை தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை. என எழுதியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் ‛‛நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், தற்கொலை செய்ய போகிறேன்'' என கண்ணீர் மல்க ஒரு வீடியோவை மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார்.