சாலையோர மக்களுக்கு உணவளித்த ராஷி கண்ணா
ADDED : 1687 days ago
முன்னணி தென்னிந்திய நடிகை ராஷி கண்ணா. பாலிவுட்டில் இருந்து வந்தாலும் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா படங்களில் நடித்தார். தற்போது அரண்மணை 3, துக்ளக் தர்பார், சர்தார், மேதாவி படங்களில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் வசித்து வரும் ராஷி கண்ணா. அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார். கொரோனா தொற்றால் வேலை வாய்ப்பின்றி சாலையில் வசிக்கும் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் அடங்கிய பைகளை வழங்கினார். இந்த பணிகளை அவர் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.