மீண்டும் தனுசுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி
ADDED : 1572 days ago
பிரேமம் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாய்பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய பிடா என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தியா என்ற படத்தில் தமிழுக்கு வந்தார். பின்னர் மாரி-2 படத்தில் தனுசுடன் நடித்தார். அந்த படத்தில் தனுசுடன் இணைந்து அவர் நடனமாடிய ரவுடிபேபி பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.
இந்நிலையில் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக தற்போது டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக சாய்பல்லவியிடம் பேசி வருகிறார் சேகர் கம்முலா.