உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீச்சில் யோகா போட்டோசூட் நடத்திய ரம்யா பாண்டியன்

பீச்சில் யோகா போட்டோசூட் நடத்திய ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இந்நிலையில் இன்று உலக யோகா தினம் என்பதால் கடற்கரைக்கு சென்று வெள்ளை நிற உடையணிந்தபடி தான் யோகா செய்யும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். இந்த போட்டோக்கள் இணையத்தில் மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. அதோடு, யோகா என்பது ஒவ்வொரு உயிரணுவிலும், ஒவ்வொரு மூச்சிலும் உள் பாதுகாப்பினை கொடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !