உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையுலகில் அடுத்த சோகம் - நடிகர் ஹம்சவர்தன் மனைவி காலமானார்

திரையுலகில் அடுத்த சோகம் - நடிகர் ஹம்சவர்தன் மனைவி காலமானார்

நடிகர் ஹம்சவர்தனின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மா என்கிற சாந்தி(வயது 42) நேற்று இரவு காலமானார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‛‛புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, மம்முட்டி உடன் ஜூனியர் சீனியர்'' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி. சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் கிழக்கு முகம், பூமணி உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் சாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும் மூச்சு திணறல் பிரச்னையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கொரோனாவாலும், அந்த நோயின் தாக்கத்தாலும் திரையுலகில் அடுத்தடுத்து பல மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !