மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1534 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1534 days ago
மாடலிங் துறையில் இருந்து பின்னர் குறும்பட நடிகராகி அதன் பிறகு சின்னத்திரை நடிகர் ஆனவர் அகிலன். தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார். என்றாலும் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தார். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பியார் பிரேம காதல் படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்தார்.
இப்போது விஷால் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இதில் அவர் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரவீனா நடிக்கிறார். இதில் டிம்பிள் ஹயாத்தி ஹீரோயின், யோகி பாபு காமெடியன்.
இது தவிர பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
1534 days ago
1534 days ago