உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓ.டி.டி. தளங்களுக்கு ரகுல் பிரீத் சிங் ஆதரவு

ஓ.டி.டி. தளங்களுக்கு ரகுல் பிரீத் சிங் ஆதரவு

கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நடிகர் - நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம். இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள்.

நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும் செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால் தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.''

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !